ஈரோட்டில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 2,460 குடியிருப்புகள்....!

ஈரோட்டில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 2,460 குடியிருப்புகள்....!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மத்திய அரசின் நிதியுதவியுடன் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, இணைத்தலைவரான மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது கூட்டத்தில் பேசிய குழு தலைவரான ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, மத்திய அரசின்  திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு துறைகளின் செயல்பாடு, பணியின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து திட்டங்களும் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

மேலும், ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 6.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,460 குடியிருப்புகளை கட்டி முடிக்க நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய பயனாளிகளை தேர்வு செய்து வழங்குவதற்கு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். 

இதையும் படிக்க    } நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில்.........கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தொட்டிகட்டும் பணி...! -அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார்.