" 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க திட்டம் " அமைச்சர் சக்கரபாணி!!

" 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க திட்டம் " அமைச்சர் சக்கரபாணி!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி ஆற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.  

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி சிந்தலவாடம்பட்டி, சத்திரப்பட்டி, வேலூர், வீரலப்பட்டி, அணைப்பட்டி, காப்பிலியபட்டி, அம்பளிக்கை, லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி ஆகிய ஊராட்சிகளில் முடிவற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், ரூ.2.49 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் உணவுத்துறை அமைச்சர் ஆர் சக்கரபாணி.

அதனைத் தொடர்ந்து வீரலப்பட்டியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் "ரூ.1000 கோடி  மதிப்பீட்டில்  காவிரி ஆற்றில் இருந்து  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் வழங்கப்படும். அதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பட்சத்தில் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை வர வாய்ப்பு இல்லை" என தெரிவித்துள்ளார்