தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்...

தூத்துக்குடி மாநகரில் 21 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்...

தூத்துக்குடியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. இதனடிப்படையில் தனிப்படை அமைத்து போதைப்பொருள் கும்பலை பிடிக்க உத்தரவிடப்பட்டு  ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டது. இந்த நிலையில்  டூவிபுரம் பகுதியில் சந்தேகிக்கும்படி நின்றுகொண்டிருந்த மூவரை பிடித்து சோதனை செய்த  போது அவர்களிடம் 162 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களான அந்தோணி முத்து, பிரேம்சிங், கசாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,தெரிவித்தார். போதை மருந்து கும்பல் சிக்கியது எப்படி என்பது பற்றியும் அவர் விளக்கம் அளித்தார்.