200 பேருக்கு எல் ஈ டி பல்புகள்; திருப்பத்தூர் அருகே நடந்த மின்சார பெருவிழா!

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மின்சார பெருவிழாவில் 200 பேருக்கு எல் இ டி பல்புகள் வழங்கப்பட்டன.

200 பேருக்கு எல் ஈ டி பல்புகள்; திருப்பத்தூர் அருகே நடந்த மின்சார பெருவிழா!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்து கந்திலி ஊராட்சிக்குட்பட்ட  வெங்களாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமணவளாகத்தில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின் சக்தி 2047 என்கிற தலைப்பில் மின்சார பெருவிழா மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி  தலைமையில் நடைபெற்றது.

ற்கனவே மாவட்டம் தோறும் ஜூலை 25 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்சார பெருவிழா இன்று நடைபெற்று முடிந்தது.

திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம் கூடுதல் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் 200 பயனாளிகளுக்கு led பல்புகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மின்சாரத்தை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எந்த வகையான மின்சார விளக்குகளை பயன்படுத்தினால் மின்சாரம் மிச்சப்படும் பகலில் மின்சாரத்தை விரயம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு வகையான மின்சார பெருவிழா குறித்த விளக்கங்களை நாடகம் வாயிலாகவும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் நடத்தி காண்பிக்கப்பட்டன.

சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் செயற்பொறியாளர்கள் அருள் பாண்டியன் சைனுல்லா அபுதின் மற்றும் மின்சார துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.