20 லட்சம் மதிப்பில் வடிகால் காட்டும் பணி ...! தொடங்கி வைத்த எம்.எல்.ஏ...!

ஆண்டிப்பட்டி ஜெ.ஜெ.நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணி - மகாராஜன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

20 லட்சம் மதிப்பில் வடிகால் காட்டும் பணி ...! தொடங்கி வைத்த எம்.எல்.ஏ...!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் ஜெ.ஜெ.நகர் பகுதி அமைத்துள்ளது. இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 450 குடும்பத்தினர், வசித்து வருகின்றனர். இந்த பகுதி உருவான நாள் முதல் இங்கு வடிகால் வசதி இல்லாமல் இருந்துள்ளது. இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன்காரணமாக இப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி இருந்தது. மேலும் மழைநீரும் தேங்கியதால் இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. 

இந்நிலையில் ஜெ.ஜெ.நகர் பகுதி மக்கள், டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் மீண்டும் மனு கொடுத்தனர். இதனையடுத்து ஜெ.ஜெ.நகர் பகுதியில் புதிய வடிகால் அமைக்க ரூ.20 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சித் தலைவர் வேல்மணிபாண்டியன் தலைமை தாங்கினார். மேலும், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். மேலும், 650 மீட்டர் தூரத்தில் வடிகால் அமைக்கும் பணி 2 மாதங்களில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.