உலக வங்கியிடம் 190 மில்லியன் டாலர் கடன் : தமிழ்நாடு அரசு அனுமதி : காரணம் இதோ....

உலக வங்கியிடம் 190 மில்லியன் டாலர் கடன் : தமிழ்நாடு  அரசு அனுமதி : காரணம் இதோ....

190 மில்லியன் டாலர் கடன்

இரண்டாவது வீட்டுவசதித்துறை வலுவூட்டல் திட்டம் - உலக வங்கியிடம் 190 மில்லியன் டாலர் கடன்  வாங்குவதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு முடிவு.

மேலும் படிக்க | ஒப்பந்த பணியாளர்களாக 25 ஆண்டுகள்...பணி நிரந்தரம் கோரி சாலை மறியல்!

அனைவருக்கும் வீடு 

ஏழை எளியோருக்கு மலிவான விலையில் வீடுகளை கட்டித்தரும் வகையில் 1514 கோடி ரூபாய்  உலகவங்கி நிதியுதவியுடன் முதலாவது வீட்டுவசதித்துறை வலுவூட்டல் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இரண்டாவது வீட்டு வசதித்துறை வலுவூட்டல் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நிலையில் திட்டத்திற்கான 190 மில்லியன் டாலர் உலகவங்கியிடம் இருந்து பெறுவதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியது தமிழக அரசு. 

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து உள்ளாடைக்குள் 2 கோடிக்கு அதிகமான தங்கம் கடத்தி வந்தவர்கள் கைது... இந்த மாடல் மட்டும் இன்னும் மாறவே இல்ல

2- வது வீட்டுவசதித்துறை வலுவூட்டல் திட்டம்

இரண்டாவது வீட்டுவசதித்துறை வலுவூட்டல் திட்டத்தை உலக வங்கி உதவியுடன் செயல்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மலிவான விலையில் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தான் இந்த வீட்டுவசதித்துறை வலுவூட்டல் திட்டம் மாநிலத்தில் நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகள் இந்த திட்டத்தின் மூலம் மலிவான விலையில் வீடுகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் முடிவு

உலகவங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது