விவசாயிகளுக்கு, நாள்தோறும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் - செந்தில் பாலாஜி!

விவசாயிகளுக்கு, நாள்தோறும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் - செந்தில் பாலாஜி!

விவசாயிகளுக்கு, நாள்தோறும் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோடையில் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : ஆன்லைன் ரம்மியில் 18 உயிரிழப்பு...ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு வீட்டில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அத்துடன், கோடைக்காலத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல், சீரான மின்சாரம் வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  விவசாயிகளுக்கு, நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.