அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு! 

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு! 

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். 

நேற்று காலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும், அமைச்சர்கள் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தனர். இந்நிலையில், இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் 3 இடங்களில் அடைப்பு உள்ளது என்றும் உடனடியாக பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட அறையில் சுமார் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். 

விசாரணைக்குப் பின், அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவிற்கு தி.மு.க. வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.