மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13247 பயனாளிகள் பயன்...

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13247 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..  

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13247 பயனாளிகள் பயன்...

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைத்தார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு , சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய் , சிறுநீரக சிகிச்சை முடக்கு வாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் படி மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 13247 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1022 நபர்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 969 நபர்களும் பயனடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை 753 பயனாளிகள் பயனடைந்துள்ளதாகவும், வரும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது