தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்!!!!!

தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்!!!!!

நீண்ட நாட்கள் கழித்து சென்னையில் 2 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில் கடந்த மாதம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 17 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இந்த மாதம் முதல் முறையாக இன்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.....

குறிப்பாக கடந்த மாதம் சில முறை மட்டுமே சென்னையில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் வெயில் சதம் அடித்துள்ளது.....

சென்னை நுங்கம்பாக்கம் 105.26°F, சென்னை மீனம்பாக்கம் 105.08°F, கடலூர் 101.12°F,  ஈரோடு 102.92°F, கரூர் பரமத்தி 104.00 °F, மதுரை விமான நிலையம் 103.64°F,  நாகப்பட்டினம் 100.76°F, பரங்கிப்பேட்டை 100. 58°F, பாண்டிச்சேரி 101.84°F, தஞ்சாவூர் 102.20°F, திருச்சி 102.74°F, திருத்தணி 103.64°F, வேலூர் 106.70°F  வெயில் இன்று பதிவாகியுள்ளது....

மேலும் படிக்க | கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை - சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட  தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரின் ஹிட்டை தாண்டாத நிலையில் இன்று 13 இடங்களில் முதல் முறையாக இந்த மாதத்தில் வெயில் சதம் அடித்துள்ளது.....நீண்ட நாட்கள் கழித்து சென்னையில் 2 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்துள்ளது அதேபோல் புதுச்சேரியிலும் நீண்ட நாட்கள் கழித்து இன்று வெயில் சதம் அடித்துள்ளது..