உதகை மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள்...!

நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயிலுக்கு 116வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உதகை மலை ரயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் தலைமையில், நிர்வாகிகள் மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.

இதையும் படிக்க : தஞ்சாவூரில் களைகட்டிய ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...!

இதையடுத்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கி மலை ரயில் குறித்த சிறப்புகளை சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து சிறப்பாக கொண்டாடினர். இதில், தோடர் இன மக்கள் தங்களது கலாச்சார உடையில் மலை ரயில் குறித்து அவர்களது பாரம்பரிய மொழியில் பாடல் பாடி நடனமாடி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.