மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்னர் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்...

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்னர்  11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்...

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 1.65 கோடியில் நவீன வசதியுடன் கூடிய மறு சீரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கத்தை  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ள மண்டலங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள  மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

வரும் 5 ம் தேதி  முதல் கேரள எல்லைகளிலிருந்தும்  வருபவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு கட்டாயம் என்றும்  2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு தமிழகம் வர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு மத்திய குழுவின் ஆய்வுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.