திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் 11 ஐடிஐகள் தொடக்கம்...!

திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் 11 ஐடிஐகள் தொடக்கம்...!

தொழில்துறை 4.0 தரத்திலான பயிற்சியை அரசு வழங்கி வருவதால், நடப்பாண்டில் 76 சதவீதம் ஐடிஐ மாணவர்களுக்கு வளாகத் தேர்வில் பணி கிடைத்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், வந்தவாசி தொகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை...ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 22 தனியார் தொழில்பயிற்சி நிலையங்களும் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் 11 ஐடிஐகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.