தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி..?  

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி..?  

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது 50 % இருக்கைகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய படங்கள் வெளியிடப்பட உள்ளன. இதனால் படத்திற்காக தியேட்டருக்கு வருவோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு சார்பில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் தங்களது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நல்ல வசூல் இருக்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.