மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்!!

மேட்டூர் அணையில் இருந்து 1 புள்ளி 25 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்!!

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் அதிகப் படியான உபரி நீர், தமிழக பகுதிகளுக்கு வந்து வண்ணம் உள்ளது.

நிரம்பி வழியும் மேட்டூர் ஆணை:

மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரானது அப்படியே, கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது.

ஆர்ப்பரித்து தண்ணீரை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள்:

கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். ஆற்று பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் வானங்களை நிறுத்தி விட்டு வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

அதிகாரிகள் அறிவுறுத்தல்:

இது ஒருபுறம் இருக்க தண்ணீர் அதிக அளவில் வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.