கேரளாவை உலுக்கிய விவகாரம்.. வரதட்சணைக்கு எதிராக குரல் எழுப்பிய மோகன்லால்.. வைரலாகும் வீடியோ

கேரளாவை உலுக்கிய விவகாரம்.. வரதட்சணைக்கு எதிராக குரல் எழுப்பிய மோகன்லால்.. வைரலாகும் வீடியோ

கேரளாவில் விஸ்மயா என்ற இளம் பெண் மருத்துவ மாணவர் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதற்கு திரைப்பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகர் மோகன் லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.            அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆராட்டு படத்தில் பெண்களுக்கு தன்னம்பிக்கை, சுயமரியாதை எந்தளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும் அந்த காணொளியை பகிர்ந்துள்ள அவர், வரதட்சனை வேண்டாம் என சொல்லுங்கள் என்றும், பெண்களுக்கு நீதியும், சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார்.