ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ஒத்த ஓட்டு பாஜக..! அதிர்ச்சியில் பாஜக வேட்பாளர்

ட்விட்டரில்  ட்ரெண்டாகும் #ஒத்த ஓட்டு பாஜக..!  அதிர்ச்சியில் பாஜக வேட்பாளர்

கோவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட, பாஜக பிரமுகரின் வீட்டிலேயே 6 பேர் உள்ள நிலையில், அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பதிவானதால், ட்விட்டரில் ’ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஸ்டேக் இந்தியாவில்  ட்ரெண்டாகி வருகிறது.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் உள்ள 9ஆவது வார்டு  இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரேயொரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளார்.

பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ள கார்த்திக்கின் குடும்பத்தில் மட்டுமே 6 பேர் உள்ள நிலையில், அவர் 1 வாக்கு மட்டுமே பெற்றுள்ளதால், குடும்பத்தினர் கூட அவரை ஆதரிக்கவில்லை என சமூக வளைதளங்களில் மீம்ஸ் பரவி வருவதோடு, ட்விட்டரில் ’ஒத்த ஓட்டு பாஜக’ என்ற ஹேஸ்டேக் இந்திய ட்ரெண்டாகி வருகிறது.