மீன் விற்கத் தடையா....போலீஸ் குவிப்பு...ஏன் தெரியுமா?

மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

மீன் விற்கத் தடையா....போலீஸ் குவிப்பு...ஏன் தெரியுமா?

புதுச்சேரியில் புராதான குபேர் அங்காடியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்தது. 

போலீஸ் குவிப்பு

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபடுதப்பட்டிருந்தனர்.புதுச்சேரி நகரப்பகுதியில் வர்தக வீதிகளான நேரு வீதி மகாத்மா காந்தி சாலை சந்திப்பில் உள்ளது குபேர் மீன் அங்காடி நாள்தோறும் மீன் பிடித்துறைமுகங்களில் இருந்து கொண்டு வரும் மீன்களை அங்காடி முன்பு காலை நேரத்தில் ஏலம் விடுவதும் விற்பனை செய்வதும் நடைபெற்று வந்தது.  

ஆட்சியர் உத்தரவு

இதனால் மீன் கழிவுகளை சாலையில் விட்டுச்செல்வதால் நேரு வீதியில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால்,மீன்கள் ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் 1 ஆம் தேதி முதல் தடை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. மீன்கள் இறக்குமதி செய்ய வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர் இதனால் மொத்த விற்பனை மற்றும் ஏலம் ஏதும் இன்று நடைபெறவில்லை அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்