எதிர்ப்பை மீறி யானை சிலை அகற்றம்...

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நினைவாக வைக்கப்பட்ட சிலையை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அகற்றியது.

எதிர்ப்பை மீறி யானை சிலை அகற்றம்...

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த மாதம் 30-ஆம் தேதியன்று நடைபயிற்ச்சி மேற்கொண்ட போது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நிலை தடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனையடுத்து லட்சுமி யானை உயிரிழந்த இடத்தில் சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து 3 அடி பீடத்தில் 2 அடி உயரத்தில் யானை சிலை அமைத்து வழிபட்டு வந்தனர்.

மேலும் படிக்க | யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி ...

இந்நிலையில் இரவு யானை சிலையை அகற்ற நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்தித்ரதுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சிலையை அகற்றிய போலீசார் மீது பக்தர்கள் கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி பக்தர்களை கலைய செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யானையின் சிலை மற்றும் பீடத்தை அகற்றி சென்றனர்.

மேலும் படிக்க | மக்கள் மனம் கவர்ந்த யானை லட்சுமியின் மறைவு..! கதறி அழுத பாகன் சக்திவேல்