புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் போராட்டம்!

புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் போராட்டம்!

என்.கே.சி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயிலில் அமர்ந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் என்.கே. சி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பாடங்கள் சரியாக எடுப்பதில்லை என குற்றம்சாட்டி வகுப்புகளை புறக்கணித்து 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளியில் கூடுதலாக கழிப்பறை அமைக்க வேண்டும், உணவு அருந்த இட வசதி செய்த தர வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் மாணவிகள் முன்வைத்த நிலையில் பள்ளியில் துணை முதல்வர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் வகுப்புக்கு சென்றனர்.