ஆளுநர் நடத்தும் மக்கள் சந்திப்பு ஜனநாயக விரோதமானது...அதிமுக கண்டனம்!

ஆளுநர் நடத்தும் மக்கள் சந்திப்பு ஜனநாயக விரோதமானது...அதிமுக கண்டனம்!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் உப்பளம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

மக்களை வற்புறுத்துகிறாரா ஆளுநர்?

அப்போது பேசிய அவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் உடன் இணக்கமாக இருந்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். துணைநிலை ஆளுநர் பல மக்கள் நல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், மக்கள் குறை தீர்ப்பு முகாமை ஆளுநர் அறிவித்துள்ளார். இது மக்களை வற்புறுத்தி அழைப்பது போல உள்ளது.  அரசுக்கு நிகராக ஒரு அரசாங்கம் நடத்துவது போல துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். 

ஜனநாயக விரோத செயல்

முன்பு இருந்த ஆளுநர் கிரன்பேடி இது போல் தான் செய்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களால் தேர்ந்ததேடுக்கப்பட்ட அரசு உள்ள நிலையில் ஆளுநர் நேரடியாக மக்கள் குறை கேட்பது ஏற்ப்புடையதல்ல. இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு செயல் புதுச்சேரியில் நடைபெறுகிறது. மக்கள் குறைகளை கேட்க முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். துணைநிலை ஆளுநர் மக்கள் சந்திப்பு ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று கண்டனம் தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். துணை நிலை ஆளுநர் தமிழிசை மாநிலத்தின் வளர்ச்சி குறித்து மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹெல்மெட் அவசியமில்லையா?

புதுச்சேரியில் ஹெட்மெட் அணிய வேண்டும் என்றும் அணியவில்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி நகர பகுதிகளில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் கூட வாகனங்கள் செல்ல  முடியாத நிலையில், நகர பகுதியில் ஹெல்மெட் அவசியமில்லை என்று தெரிவித்தார்.