நாடாளுமன்றத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் விமர்சனங்களும்.....

நாடாளுமன்றத்தில் தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் விமர்சனங்களும்.....

தடை செய்யப்பட்ட வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவேன் என்றும் துணிவு இருந்தால் தன்னை இடைநீக்கம் செய்யட்டும் என்றும் நாடாளுமன்றத்தின் அறிக்கைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்:

நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது குறிப்பிடப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக வெட்கப்படுகிறோம். அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன்.  ஜனநாயகத்துக்காகப் போராடுகிறோம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பயன்படுத்துவத்துவதற்கு சில வார்த்தைகளைப்  தடைசெய்தது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில், ஆர்ப்பாட்டம், தர்ணா, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் போன்றவை நடைபெறும் என்று கூறினார் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்.  மேலும், சமீபத்தில் யாரேனும் மத விழாவை நடத்தினரா? தனக்கு நினைவூட்ட முடியுமா? என்று மத்திய அரசைக் கிண்டல் செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

சபாநாயகர் பதில்:

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பயன்படுத்த எந்த வார்த்தைகளுக்கும்  தடை விதிக்கப்படவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.

முன்னரும் இதுபோன்று நாடாளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.  காகிதம் பயன்பாட்டை குறைக்க அதை இணையத்தில் போட்டுள்ளோம். வார்த்தைகள் தடை செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று பிர்லா தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்:

 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியாகியுள்ளன. 

அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர்,  நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

 
 சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், முதலைக் கண்ணீர், கழுதை, பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள் உள்ளிட்ட வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபைக் குறிப்பில் இருந்து நீக்கி விடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.