என்.ஐ.ஏ கலைக்கப்பட வேண்டும்...மக்கள் பேரணி!

மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் திரும்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

என்.ஐ.ஏ கலைக்கப்பட வேண்டும்...மக்கள் பேரணி!

ஒன்றிய அரசைக் கண்டித்து முஸ்லிம் ஜமாத் சார்பில் கண்டன பேரணி. பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

மாநில உரிமைகளைப் பறிக்கும் என்.ஐ.ஏ

மாநில அரசின் உரிமைகளையும் மாநில காவல்துறையின் அதிகாரங்களையும் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (NIA) கலைக்க வலியுறுத்தியும், மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(UAPA) திரும்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மதச் சிறுபான்மை சமூகங்களையும், மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளையும் ஜனநாயக அமைப்புகளையும் அச்சுறுத்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும் காரைக்காலில் முஸ்லிம் ஜமாத் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம்

காரைக்கால் பெரிய பள்ளிவாசல் அருகில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பேரணியில் மதசார்பற்ற அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும்  பெண்கள் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமையை திரும்ப பெற வலியுறுத்தியும்,  கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.