உணவுக் கழகம் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்...விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளுக்கு விற்பனைக்கான இடம் ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  50க்கும் மேற்பட்டோர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

உணவுக் கழகம் தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்...விவசாயிகள் கோரிக்கை!

திருநள்ளாறு பகுதி  விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள காப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

1. நெல் கொள்முதலை நேரடியாக இந்திய உணவுக்கு கழகம் வாயிலாக  நேரடியாக எடுக்க வேண்டும்
2. இந்த ஆண்டுக்கான கூட்டுறவு கடனை விரைவில் வழங்க வேண்டும்
3. நடவுக்கு பிந்தைய மானியத்தை  விரைவில் வழங்க வேண்டும்
4. புதுச்சேரி அரசு தள்ளுபடி செய்வதாக கூறிய கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்
5. கடந்தாண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் 

மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
 
காரைக்கால் நேரு மார்க்கெட்டில் பேட்டை, அத்திபடுகை, அகலங்கன்னு, பூவம், வரிச்சகுடி உள்ளிட்ட பகுதிகளில் காய்கனி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விற்பனைக்கான இடம் ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  50க்கும் மேற்பட்டோர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

திருநள்ளாறு பகுதியில் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து எந்தவொரு அரசியல் கட்சிகள் சார்பின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாகவும், இதற்கு புதுச்சேரி அரசு செவிசாய்க்காத பட்சத்தில் மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.