கொரோனாவால் இறந்த பாபா ராம்தேவ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்.! -நாங்கள் காரணம் அல்ல என்ற பதஞ்சலி நிறுவனம் .!  

கொரோனாவால் இறந்த பாபா ராம்தேவ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்.! -நாங்கள் காரணம் அல்ல என்ற பதஞ்சலி நிறுவனம் .!  

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் சுனில் பன்சால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு பதஞ்சலி நிறுவனம் காரணமில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது. 

ஆரம்பத்தில் யோகா குருவாக இருந்த பாபா ராம்தேவ், பின்னர் பதாஞ்சலி என்னும் வணிக நிறுவனத்தை தொடங்கினார். அதில் ஆயுர்வேத பொருள்கள் விற்கத்தொடங்கிய அவர் படிப்படியாக தனது வியாபாரத்தை பெருக்கினார்.  இப்போது பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் முக்கியமான கார்பொரேட் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

இந்நிலையில் தற்போது கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் தீவிரமாக போராடி காப்பாற்றி வருகின்றனர். ஆனால் மருத்துவர்களையும், அலோபதி சிகிச்சையையும் பற்றி அவதூறாக சில கருத்துக்களை பாபா ராம்தேவ் வெளியிட்டார். அவரின் இந்த கருத்துக்கு மருத்துவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

தொடர்ந்து எதிர்ப்புகள் எழவே மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தலையிட்டு ராம்தேவின் கருத்தை திரும்ப பெறச்சொன்னார். அதன் படி ராம்தேவும் தனது கருத்தை திரும்பப்பெற்று வருத்தம் தெரிவித்தார். 

நிலைமை இப்படி இருக்க தற்போது கொரோனாவால்  பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் பால்பொருட்கள் பிரிவில் துணைத் தலைவராக இருந்த சுனில் பன்சால் (57) கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். சுனில் பன்சாலை அலோபதி மருத்துவம் எடுக்கவிடாமல் செய்தார் என்று பாபா ராம்தேவ் மேல் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பதஞ்சலி நிறுவனத்தின் பால் பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் சுனில் பன்சால் கொரோனா தொற்றால் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மனைவி ராஜஸ்தான் அரசின் சுகாதாரத்துறையில் முக்கிய அதிகாரியாக இருக்கிறார

சுனில் பன்சாலுக்கு வழங்கப்பட்ட அலோபதி சிகிச்சையில் எந்தவிதத்திலும் பதஞ்சலி நிறுவனம் தலையிடவில்லை. பன்சாலின் மனைவியின் கண்காணிப்பில்தான் சிகிச்சை நடந்தது. பன்சாலின் உடல்நலத்தின் மீது கவலை கொண்டு தொடர்ந்து அவரின் மனைவியிடம் விசாரித்தோம். எங்கள் நிறுவனத்தின் துடிப்புமிக்க அதிகாரியான பன்சாலை இழந்தது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது, துரதிர்ஷ்டமானது” எனத் தெரிவித்துள்ளது.