இந்தியாவுக்கு வரும் நோவாவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசி,. 90.4 % எதிர்ப்பு திறன் இருக்கிறதாம்,..!  

இந்தியாவுக்கு வரும் நோவாவாக்ஸ் என்னும் கொரோனா தடுப்பூசி,. 90.4 % எதிர்ப்பு திறன் இருக்கிறதாம்,..!  

நோவாவாக்ஸ் என்ற 90.4சதவீத நோய் எதிர்ப்பு திறன் கொண்ட கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்ந தடுப்பூசி குழந்தைகளுக்காக தயாரிக்கப்படுகிறது. 

அமெரிக்காவை சேர்ந்த  பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவாக்ஸ், மறுசீரமைப்பு செய்த நானோ புரத சத்து கொண்ட கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இந்த தடுப்பூசி தயாரித்து வழங்குவதற்கான உரிமத்தை கடந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றது. 

இந்த நோவாவாக்ஸ் தடுப்பூசி கொரோனா தொற்றினால் ஏற்படும் மிதமான மற்றும் கடுமையான பாதிப்புகளுக்கு எதிரான சோதனைகளில் 90.4 சதவீத ஒட்டுமொத்த செயல்திறனைக் காண்பிப்பதால், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நோவாவாக்ஸின்  தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது. இந்த பரிசோதனை குழந்தைகள் மீது ஜூலை மாதத்தில் துவங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

கடந்த வாரம், நோவாவாக்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் 119 மையங்களில் 3 கட்ட சோதனைகளின் முடிவுகளை அறிவித்தபோது, ​​ஒட்டுமொத்த செயல்திறனை 90.4 சதவீதமாக இருந்தது. இதனை தொடர்ந்து ​​இந்தியாவின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவரான டாக்டர் வி.கே. பால், சீரம் நிறுவனத்திற்கு தாமதமின்றி மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். 

ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏறத்தாழ 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று  எதிர்பார்க்கிறது. இந்த தடுப்பூசி 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் சேமிக்க வேண்டும் என்பதால்  இது இந்தியாவில் பதப்படுத்த ஏற்றதாக உள்ளது என சீரம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.