ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு

ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற உச்ச வரம்பை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு

ஐஎம்பிஎஸ் பணப்பரிமாற்ற உச்ச வரம்பை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதை நவீன யுகத்தில் மக்கள் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளை நாடுவதை விரும்ப வில்லை என்றே கூற வேண்டும். விரல் நுனியில் 24 மணி நேரமுல் இயங்கும் கையடக்க வங்கி சேவை அதாவது செல்போனில் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு ஆன்லைனில் உடனடி கட்டண சேவை என்னும் ஐஎம்பிஎஸ் சேவையின் மூலம் மக்கள் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.

இதன் அதிகபட்ச வரம்பு 2 லட்சமாக இருந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதன் உச்ச வரம்பை 5 லட்சமாக உயர்த்தி  ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.