இரண்டு சிவசேனா...இரண்டு சின்னமா? தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

இரண்டு சிவசேனா...இரண்டு சின்னமா? தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர், சிவசேனா கட்சி மற்றும் சின்னத்திற்காக போர்க் கொடி தூக்கினர். இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகியதால், சிவசேனாவின் வில் அம்பு சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில், உத்தவ் தாக்ரேவுக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும், உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல ஏக்நாத் ஷிண்டே அணியினருக்கு பாலசாகேப்பான்சி சிவசேனா என்ற பெயரை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏக்நாத் ஷிண்டே வழங்கிய சின்னங்களில் ஒன்று மதத்தை குறிப்பதாகவும் மற்றொரு சின்னம் மாநிலக் கட்சியின் சின்னமாகவும் இருப்பதால் முன்பு அவர் வழங்கிய பட்டியல் நிராகரிக்கப்பட்டது. புதிய சின்னம் தொடர்பான பட்டியலை இன்று அளிக்குமாறு ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.