ஹிஜாப் தடை நீடிக்குமா? கல்வி அமைச்சர் விளக்கம்!

மாணவிகள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஹிஜாப் தடை நீடிக்குமா? கல்வி அமைச்சர் விளக்கம்!

இந்திய உச்சநீதிமன்றம் ஹிஜாப் அணிவது குறித்த இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

கர்நாடக ஹிஜாப் விவகாரம்

கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடக அரசு பள்ளி மற்றும்  கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து புதிய சீருடை விதிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியிட்டிருந்தது.

இதை எதிர்த்து மாணவிகள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் ஹிஜாப் தடை தொடர்பான ஆணை செல்லும் என கடந்த மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு கர்நாடகா முழுவதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை அரசு தீவிரமாக செயல்படுத்தியது. 

மேலும் படிக்க : ”ஹிஜாப் வேண்டும்...” நீதிபதி துலியா ஆதரிக்கும் காரணம் என்ன?!!...யார் இந்த நீதிபதி துலியா?!!

தீர்ப்பு குறித்து கர்நாடக அமைச்சர்

மாறுபட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வந்துள்ளதால் தற்பொழுது கர்நாடக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஹிஜாப் தடை நீடிக்கும் என கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆகையால் தற்பொழுது கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமலில் இருக்கிறது. கர்நாடக கல்வி சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வந்த ஹிஜாப் தடை தொடர்ந்து அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

- ஜோஸ்