சிஏஏ- என்ஆர்சி சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள்

சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகிய சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிஏஏ- என்ஆர்சி சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் -  இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போல் இஸ்லாமிய சிறுபான்மையின சமூகத்திற்கு எதிரான சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகிய சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இஸ்லாமிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விவசாயிகள் தொடர் போராட்டத்தின் விளைவாக மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்கு இஸ்லாமிய தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல், சிஏஏ- என்ஆர்சி போன்ற சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.