கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்... கண்கவர் அணிவகுப்புடன் மிடுக்கு நடைபோட்ட விமானப்படை வீரர்கள்..!

விமானப்படையின் 90-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு சண்டிகரில் கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது..!

கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்... கண்கவர் அணிவகுப்புடன் மிடுக்கு நடைபோட்ட விமானப்படை வீரர்கள்..!

கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம்... கண்கவர் அணிவகுப்புடன் மிடுக்கு நடைபோடும் விமானப்படை வீரர்கள்..!

இந்திய விமானப்படை தினம்
 
வான்வெளி தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கென 1932 ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதன் சேவையை பாராட்டிடும் நோக்கில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

மேலும் வாசிக்க: போர் விமானங்களில் ரோந்து பணி செல்லும் பெண் விமானிகள்

90வது ஆண்டு விழா

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்புடன், அப்படையின் 90 ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 90வது விமானப் படை தினம் சண்டிகரில் உள்ள விமானப் படை தளத்தில், பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

புதிய சீருடை அறிமுகம்

சீருடையில் மிளிர்ந்த வீரர்கள் மிடுக்கு நடையுடன் அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து  சாகசங்களை நிகழ்த்தின. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய விமானப்படையின் தலைமை தளபதி விவேக் ராம் சவுத்ரி, புதிய சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.

வானில் பறந்து வீரர்கள் சாகசம்

விமான தினத்தை முன்னிட்டு சண்டிகர் விமானப் படை தளத்துக்கு அருகிலுள்ள சுக்னா ஏரியின் வான்பரப்பில் 80க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் பறந்து சாகசம் செய்தன. இதில் உள்நாட்டு தயாரிக்கப்பட்ட பிரசந்த் ஹெலிகாப்டர், சினுக், அப்பாச்சி உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும், ரபேல், தேஜஸ், சுகோய் உள்ளிட்ட விமானங்களும் பங்கேற்றன.