சண்டிகரில் கொரோனா பூஸ்டர் போடுபவர்களுக்கு இலவச சோலே படூரே! பிரதமர் வாழ்த்து!!

சண்டிகரில் கொரோனா பூஸ்டர் போடுபவர்களுக்கு இலவச சோலே படூரே! பிரதமர் வாழ்த்து!!

பஞ்சாப் சண்டிகரில், ஒரு தள்ளு வண்டி கடை நடத்தி வரும் ஒருவர், தனது கடையில், வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும், பூஸ்டரும் போட்டிருந்தால், அவர்களுக்கு இலவசமாக உணவு வழ்ங்குவதாக அறிவித்திருக்கிறார்.

45 வயதான, சஞ்சய் ராணா என்பவர் இந்த மரியாதைக் குறிய காரியத்தை செய்பவர். தனக்கு மனநிறைவு தருவதாகக் கூறிய ராணா, பூஸ்டர் போடமலேயே, இந்த இலவச உணவைப் பெற வருவதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு, கோவிட் 19-கான தடுப்பூசியைப் பெற்றவர்கள், அதன் செர்டிஃபிகேட்டை அன்றே சமர்ப்பித்தால், அன்று அவர்களுக்கு, இலவசமாக சோலே பட்டூரே அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேண்டிர மோடி, மாதாந்திர ‘மன் கி பாத்’ என்ற ரேடியோ தொடரில், ராணாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

வரது மகள் ரித்திமா மற்றும், மருமகள் ரியா தான் ராணாவிற்கு இந்த யோசனையைக் கொடுத்திருக்கின்றனர். கடந்த 15 வருடங்களாக தள்ளு வண்டியில் உணவு விற்று வரும் ராணாவின் கடையில் விற்கும் சிறப்பு உண்வே இந்த சோலே படூரே தான்.

கடந்த ஏழு மாதங்களாக இந்த பணியை செய்து வரும், ராணா ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்தவர். 10ம் வகுப்பு வரி மட்டுமே படித்த இவர், தனது தந்தை இறந்ததால், குடும்பத்தின் பொருப்புகளை முழுமையாக தனது தோள்களில் ஏற்றுக் கொண்டார்.

சமீபத்தில், 200 கோடி கொரோனா தடுப்பூசிகளைப் போட்டு, இந்தியா கொரோனாவிற்கு எதிரான ஒரு போட்டியில் புதிய மைலகல்லை எட்டிய நிலையில், ‘கோவிட் தடுப்பூசி மகோத்சப்வம்’ தொடரப்பட்டது. 75 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவில், இது வரை, 68,97,62,152 மக்களில், 7,30,96,284 பேர் பூஸ்டர்களுக்கு தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த பிரச்சாரத்திற்கான தனது பங்களிப்பைக் கொடுக்கும் ராணாவை, பிரதமர் மோடி, “சஞ்சய் ராணாவின் 'சோலே படூரே'யை இலவசமாக ரசிக்க, நீங்கள் அதே நாளில் தடுப்பூசி எடுத்துள்ளீர்கள் என்பதைக் காட்ட வேண்டும். தடுப்பூசி செய்தியைக் காண்பித்தவுடன் அவர் உங்களுக்கு சுவையான 'சோலே படூரே' தருவார்” என்று கூறி, பெருமிதம் கொண்டது குறிப்பிடத்தக்கது.