பாகிஸ்தான் பத்திரிக்கையாளருடன் குடியரசு முன்னாள் தலைவருக்கு தொடர்பு-ஆதாரம் வெளியிட்ட பாஜக:

பாகிஸ்தான் பத்திரிக்கையாளருடன்   குடியரசு முன்னாள் தலைவருக்கு தொடர்பு-ஆதாரம் வெளியிட்ட பாஜக:

நஸ்ரத் மிர்சா பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஆவார். இவருடன் முன்னாள் குடியரசு தலைவர் அமீது அன்சாரிக்கு தொடர்பு இருந்ததாக பாஜக முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.  குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யென மறுத்தார் அன்சாரி.  இந்நிலையில் அதற்கான ஆதாரங்களை பாஜக வெளியிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது குடியரசு தலைவராக அமீது அன்சாரி இருந்த போது மிர்சா இந்தியா வருகை புரிந்ததாகவும் அவருடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததாகவும் பாஜக கூறியிருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அழைப்பை ஏற்று தான் ஐந்து முறை இந்தியாவிற்கு வருகைப் புரிந்ததாக மிர்சா கூறியுள்ளார்.  மேலும் இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை அன்சாரி தன்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் தகவல்களை சேகரித்து அதை பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐயிடம் தான் பகிர்ந்து கொண்டதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த குடியரசு முன்னாள் தலைவர் அமீது அன்சாரி அவருக்கு மிர்சா யார் என்பதே தெரியாது எனவும் அவருக்கும் மிர்சாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் மறுத்துள்ளார்.  மேலும் தன்மீது பொய்யாக குற்றஞ்சாட்டுவதாகவும் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா குடியரசு தலைவர் என்ற முக்கியமான பொறுப்பில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என கேள்வியெழுப்பியுள்ளார்.  மேலும் இந்திய உளவு துறையின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பாகிஸ்தானின் பத்திரிக்கையளரிடம் தெரிவித்தது அபத்தமானது எனவும் கூறியுள்ளார்.  

இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக பயங்கரவாதம் தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டார் பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா.