வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சி - மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்பு  

கேரள மாநிலம் கோட்டயத்தில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சி - மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்பு   

கேரள மாநிலம் கோட்டயத்தில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன.

தற்போது மழை பொழிவு சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் வெள்ள நீர் வடிய தொடங்கியது. இருந்த போதிலும் கோட்டயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது