மின்துறை தனியார்மயம்...முதலமைச்சர் ஆளுநர் சந்திப்பு!

மின்துறை தனியார்மயமாக்கும் போது அரசு சார்பில் 51% பங்குகளையும், தனியாரிடம் 49 % பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

மின்துறை தனியார்மயம்...முதலமைச்சர் ஆளுநர் சந்திப்பு!

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

மின் துறை தனியார்மயமாக்கல்

புதுச்சேரி அரசு மின்துறையை தனியார்மயமாக்கலுக்கு டெண்டர் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 நாட்களாக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சருடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் மின்துறை தனியார்மயமாக்கும் போது அரசு சார்பில் 51% பங்குகளையும், தனியாரிடம் 49 % பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதற்கு கால அவகாசம் கோரியதால் ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை திரும்பப்பெற்று பணிக்கு திரும்பினர். 

அதிகாரிகளுடன் ஆலோசனை

இந்நிலையில் மின்துறை விவகாரம் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனியார்மயமாக்கலுக்கான பரிவர்த்தனை அதிகாரி, தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலர் உள்ளிட்ட மின்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். மேலும் ஆலோசனையில் மின்துறை தனியார்மயமாக்கல் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.