கைரேகையில் ஓவியம்...உலக சாதனை படைத்த மாணவர்கள்!

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக கைரேகை பதிவு செய்து விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்வு நடைபெற்றது. 

கைரேகையில் ஓவியம்...உலக சாதனை படைத்த மாணவர்கள்!

புதுச்சேரியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

ஓவியப் போட்டி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் விழிகள் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்வுகள் அறங்கேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி அரசு பள்ளிக கல்வி இயக்ககம், பாகூர் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கலாம் உலக சாதனை இணைந்து "சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக கைரேகை பதிவு செய்து விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்வு நடைபெற்றது. 

சாதனை படைத்த மாணவர்கள்

பாகூர் கமலாநேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசு பள்ளியை சேர்ந்த 126 மாணவர்கள் கலந்துகொண்டு 210 சார்ட்டுகளில் தங்களது கட்டைவிரல் கைரேகைகளை பதித்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற தலைப்பிலான ஓவியத்தை சுமார் 750 சதுர அடியில் வரைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து  உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.