தெலுங்கானாவில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்!!

தெலுங்கானா  மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில்  காலை சிற்றுண்டி திட்டத்தை  அம்மாநில நிதி அமைச்சர்  ஹரீஷ் ராவ் தொடங்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் என்ற பெயரிடப்பட்டுள்ள திட்டத்திற்கு 400 கோடி ரூபாயை  தெலுங்கான அரசு ஒதுக்கியுள்ளது. 

முன்னதாக தெலங்கான குழு தமிழ்நாட்டில் வந்து  காலை உணவு திட்டம் குறித்து  ஆய்வு செய்து சென்றது குறிப்பிடதக்கது. முதல் கட்டமாக 43,000 அரசு பள்ளிகளில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் காலை சிற்றுண்டி திட்டத்தில், திங்கள் அன்று மாணவர்களுக்கு இட்லி சாம்பார் அல்லது ரவை உப்புமா சட்னி ஆகியவை வழங்கப்படும். செவ்வாய் அன்று பூரி, உருளைக்கிழங்கு குருமா அல்லது தக்காளி சாதத்துடன் உப்புமா,சாம்பார் ஆகியவையும், புதன் அன்று உப்புமா, சாம்பார் அல்லது கிச்சடி,சட்னி ஆகியவையும், வியாழன் அன்று சிறுதானிய இட்லி, சாம்பார் அல்லது பொங்கல், சாம்பார் ஆகியவையும், வெள்ளியன்று உகாணி/ சிறுதானிய இட்லி, சட்னி அல்லது இட்லி, சட்னி ஆகியவையும், சனி அன்று பொங்கல்,சாம்பார் அல்லது வெஜிடபிள் பிரியாணி, வெங்காய பச்சடி, குருமா ஆகியவையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.