அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவின் கூட்டணி கட்சி!

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜகவின் கருத்தியல் ரீதீயான எதிரியாக கருதப்படும் திமுகவின் நிறுவனரான அண்ணாவுக்கு மரியாதை செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவின் கூட்டணி கட்சி!

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போல திமுக மற்றும் அதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்த நாள்

அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக - திமுக மரியாதை செலுத்தினர்

இதேபோல் அதிமுக சார்பில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக அலுவலகத்தில் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ரங்கசாமி மரியாதை

என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ரங்கசாமி, அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜகவின் கருத்தியல் ரீதீயான  எதிரியாக கருதப்படும் திமுகவின் நிறுவனரான அண்ணாவுக்கு மரியாதை செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.