ஆன்லைன் விற்பனையில் தாராள தள்ளுபடிக்கு சிக்கல்: மத்திய அரசு எச்சரிக்கை

ஆன்லைன் வணிக நிறுவனங்களின் அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்து புகார் வந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு  விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முக்கியமான திருத்தங்களை சேர்ப்பது தொடர்பாக ஜூலை 6-ந் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் மோசடியான தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிப்பது, தலைமை குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இதனால், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ‘பிளாஷ் சேல்’ என்ற பெயரில் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக கூடுதல் செயலாளர் நித்தி காரே, அதிரடி தள்ளுபடி விற்பனையை தாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய போட்டி இருந்தால்தான், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். என கூறியுள்ளார். 

ஆனால், மோசடியான தள்ளுபடி விற்பனை நடந்தாலோ, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தாலோ சட்டப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மோசடியான விற்பனை நடந்தால், புகார் தெரிவிக்கும் வசதி இருக்க வேண்டும் என்பதால் தான் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. என அவர் கூறினார்.