மோடியை சந்திக்கவுள்ள எடியூரப்பா! மேகதாது திட்டத்துக்கு அனுமதி தர கோரிக்கை!!?

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

மோடியை சந்திக்கவுள்ள எடியூரப்பா! மேகதாது திட்டத்துக்கு அனுமதி தர கோரிக்கை!!?

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.

மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி குழு டில்லி சென்றது. இதையறிந்த கர்நாடக முதலமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான எடியூரப்பா, இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். துணை முதலமைச்சர் கோவிந்த் கார்ஜோள், சட்டத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசன துறை உயர் அதிகாரிகள், அவருடன் செல்கின்றனர். அவர்கள் அனைவரும், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

மேகதாது திட்டத்துக்கு அனுமதி தரும்படி வலியுறுத்த எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் எடியூரப்பா சந்திக்கவுள்ளார்