" வீட்டு வேலை செய்ய விருப்பமில்லாத பெண்கள் திருமணத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..." - மும்பை உயர்நீதிமன்றம்

" வீட்டு வேலை செய்ய விருப்பமில்லாத பெண்கள்  திருமணத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..." - மும்பை உயர்நீதிமன்றம்

திருமணமான பெண், குடும்பத்திற்காக வீட்டு வேலைகளைச் செய்வது கொடுமையல்ல என மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை கூறியது பேசுபொருளாகியுள்ளது. 

திருமணமான ஒரு மாதத்திற்கு சரியாக நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பணிப்பெண் போல நடத்தப்பட்டதாகவும் ஒரு பெண் தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். திருமணமாகிய ஒரு மாதத்திற்குப் பின் வாகனம் வாங்க கணவன் குடும்பத்தினர் 4 லட்ச ரூபாய் கேட்டதாகவும், தொடர்ந்து பணிப்பெண் போல் நடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் ஒரு பெண் புகார் தெரிவித்தார். மேலும் இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். 

இதனை வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடும்பத்திற்காக வீட்டு வேலை செய்வது பணிப்பெண்ணின் வேலையாகாது என தெரிவித்தனர். மேலும், அதனை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்துக்கு முன்பே மணமகனிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது மணமகனுக்கு திருமணத்தை பற்றி முடிவு செய்ய ஏதுவாக இருக்கும். முன்கூட்டியே தெரிவித்தால் இத்தகைய பிரச்சனை தீர்க்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையும் படிக்க : ஒரே வாகனத்திற்கு இரண்டு பேரில் பதிவு... என்ன தான் செய்கின்றனர் அதிகாரிகள்?