இனிமேல்..2வது பெண் குழந்தை பிறந்தால்..இவ்வளவு சலுகைகளாம்...மத்திய அரசின் சர்ப்ரைஸ்...

பெண்களே இனிமேல் இரண்டாவது குழந்தை பிறந்தாலும் சலுகைகள் இருக்கிறதாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இனிமேல்..2வது பெண் குழந்தை பிறந்தால்..இவ்வளவு சலுகைகளாம்...மத்திய அரசின் சர்ப்ரைஸ்...

முதல் பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு "பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா" என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக, 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் முதல் பிரசவத்துக்கு இத்திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் 5,000 ரூபாய் உதவித் தொகை, மருத்துவ வசதிகள், ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை மத்திய அரசால் அளிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் 2வது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கும் இந்த சலுகைகளை வழங்க, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் மத்திய அரசு திட்டத்தில் சலுகை வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் வருகின்ற  ஏப்ரல் 1-ந்தேதி அமலாகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தாய்மார்களுக்கான இந்த திட்டத்தில் மேலும் சலுகைகள் வழங்கப்பட இருக்கிறதாம்.

முதலெல்லாம் முதல் பெண் குழந்தைக்கான உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பிறகு திருத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 2 தவணைகளாக பணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் தாய்மார்களுக்கு முழுத்தொகையும் குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.

அதுவும் தற்போதைய சூழலில், கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும்  உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் பெண்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.