மாற்றத்தைக் காணுமா 2023 அரசியல்...?!

மாற்றத்தைக் காணுமா 2023 அரசியல்...?!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் வெற்றியடைந்து அதன் நோக்கத்தை அடையும் என்றும், 2023ல் நாடு அச்சமற்றதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிவினை அரசியல்:

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களிடையே வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கக் கூடாது என்று சிவசேனாவின் அரசியல் பத்திரிக்கையான ‘சாம்னா’வில் அவர் எழுதிய கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளார். 

அதில், ராமர் கோவில் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விட்டதால், அதில் இப்போது ஓட்டு கேட்க முடியாது அதனால்தான் லவ் ஜிகாத்தை ஆயுதமாக்கி இந்துக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது எனவும் இந்துக்களை எழுப்புவது பாஜகவின் செயல்திட்டம் எனவும் கூறிய அவர் இவ்வாறு அவர்கள் செய்வது சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் மட்டுமே உருவாக்கும் எனவும் கூறியுள்ளார்.  

தொடர்ந்து அவர் அந்த கட்டுரையில் எந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் தங்களுக்கு எதிரான கொடுமைகளை பொறுத்துக் கொள்ளக் கூடாது எனவும் என்ன நடந்தாலும் அது அதிகார அரசியல்தான் என்றும் பேசியுள்ளார்.   

எதிர்க்கட்சிகளின் இருப்பு:

மேலும் ராகுல் காந்தியின் நடைபயணம் நிச்சயம் வெற்றியடைந்து அதன் நோக்கத்தை அடையும் என்றும், 2023-ல் நாடு அச்சமின்றி இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.  ராவத் மோடி ஆட்சி குறித்து பேசுகையில் “குறுகிய மனப்பான்மையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார், ஆனால் பாஜக ஆட்சியில் இதுபோன்ற மனப்பான்மை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.  எதிர்க்கட்சிகளின் இருப்பையும் உரிமைகளையும் தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றும் எழுதியுள்ளார்.

மாற்றத்தைக் காணுமா?:

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தலைமைக்கு 2022 ஆம் ஆண்டு புதிய ஒளியைக் கொடுத்துள்ளதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.  2023-ம் ஆண்டிலும் இதே நிலை நீடித்தால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாடு பெரிய அரசியல் மாற்றத்தைக் காணக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  லட்சதீவில் பொதுமக்கள் நுழைய தடையா...காரணம் என்ன?!!