வழக்கு பதியாமல் தடுப்புக் காவலில் வைத்தது ஏன்? - மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி

வழக்குப் பதிவு செய்யாமலும், அனுமதி இல்லாமலும் தன்னை 28 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்துள்ள மோடி அரசு, விவசாயிகளைக் கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்திர பிரதேசம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை காண சென்றுக் கொண்டிருந்த பிரியங்கா காந்தியை உத்திர பிரதேச போலீசார் நடு வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்ததுடன் தடுப்பு காவலில் அடைத்து வைத்துள்ளனர். நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை தடுப்பு காவலில் உள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, மோடி தலைமையிலான அரசு, எந்த வித உத்தரவோ, வழக்கு பதிவோ இன்றி தன்னை 28 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் உணவளிக்கும் விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபர் இதுவரை கைது செய்யப்படாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.