எதனால தோற்றோம்.. சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்.. முக்கிய பிளான் போட வாய்ப்பு!!

இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

எதனால தோற்றோம்.. சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்.. முக்கிய பிளான் போட வாய்ப்பு!!

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற அக்கட்சி, பஞ்சாபில் ஆட்சியை பறி கொடுத்தது. உத்ரகாண்ட் மற்றும் கோவாவில் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அக்கட்சியின் எண்ணம் நிறைவேறவில்லை. தற்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மட்டும் தான் அக்கட்சி ஆட்சியில் உள்ளது.

அடுத்து நடைபெற உள்ள குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் அக்கட்சி வெற்றி பெறாவிட்டால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பறி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காங்கிரஸ், அதிருப்தி தலைவர்களான கபில் சிபல், ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி உள்ளிட்டோர், டெல்லியில் உள்ள மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் வீட்டில் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சோனியா காந்தி தலைமையில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த காங். தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள உட்கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.