உறுதியளித்த 2 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே...? - மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி

உறுதியளித்த 2 கோடி வேலை வாய்ப்புகள் எங்கே...? - மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி

அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், வேலை இல்லா திண்டாட்டத்தை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய அவர், இளைஞர்கள் வேலையின்றி மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவித்தார்.

மத்திய அரசு துறைகளில் 9 லட்சம் காலி இடங்கள் இருப்பதாக குறிப்பிட்டதோடு, கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்ததாகவும், அதன்படி இதுவரை 15 கோடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தப்படும் என  மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.