மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்; 600 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு!

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்; 600 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு!

மேற்கு வங்க மாநிலம் கிராமப்புற பஞ்சாயத்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை கிராமப் புற பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் வேட்பாளர்கள் களமிறங்கினர்.West Bengal Panchayat election: Violence, bloodshed mark poll day's end;  death toll climbs | 10 Points | Kolkata News – India TV

மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கூச்பிகார், மால்டா, முர்ஷிதாபாத், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட உள்ளிட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில இடங்களில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன, வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. West Bengal panchayat elections: Repolling in 568 booths underway - The  Hindu BusinessLine

இந்த நிலையில் வாக்குப்பதிவில் முறைகேடு, வன்முறை மற்றும் கலவரம் நடந்ததாக கண்டறியப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று மறுவாக்குப் பதிவு நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 600க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதையும் படிக்க:"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு ஆளுநர்தான் காரணமா?" முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!