” மக்களின் நன்மைக்காகவே தான் பல்வேறு மசோதாக்களை கொண்டுள்ளோம்” - பிரதமர் மோடி.

” மக்களின் நன்மைக்காகவே தான் பல்வேறு மசோதாக்களை கொண்டுள்ளோம்” -  பிரதமர் மோடி.

எதிர்கட்சியினருக்கு மக்களின் பசியைப் போக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பசிதான் உள்ளது என நாடாளுமன்ற உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

 மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையைக் கண்டித்து  நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும்  எதிர்க்கட்சிகளின் அமளிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறையாற்றும்போது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் தனது உரையில்:-  தன்மீதான இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்பதை தான் 5 ஆண்டுகளுக்கு முன்பே கணித்ததாகவும்,  ஊழல் செய்த கட்சிகள்  தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார். 

” நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எதிர்கட்சியினர் ’நோ-பால்’தான் வீசினர் என்றும், எதிர்கட்சிகள் என்னதான் ஃபீல்டிங்கில் இருந்தாலும், ஆளுங்கட்சி அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாகவே அடிக்கிறது” என  விமர்சித்தார். 

மேலும், ”எதிர்கட்சியினருக்கு மக்களின் பசியைப் போக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பசிதான் உள்ளது”, என்றும் விமர்சித்தார். 

INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸை புறக்கணித்துவிட்டதாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்தார். எதிர்கட்சிகளின் கடைகளுக்கு விரைவில் பூட்டு போடப்படும்; எதிர்க்கட்சிகளின் அகங்காரத்தை திருத்தும் பணியை தேசம் செய்யும் எனவும் குறிப்பிட்டார். 

மக்களின் நன்மைக்காகவே தான் பல்வேறு மசோதாக்களை கொண்டு வந்துள்ளதாகவும் எனவும் தெரிவித்தார். 

கடந்த 9 ஆண்டுகளில் ஊழலற்ற அரசை பாஜக வழங்கியுள்ளது எனவும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து  முந்தைய சாதனைகளை பாஜக முறியடிக்கும்  என்றும் கூறினார். 

மேலும், எதிர்கட்சிகளுக்கு பாஜகவிடம் என்ன கேள்வி கேட்பது, எப்படி கேள்வி கேட்பதென்றே தெரியவில்லை; காங்கிரஸிடன் சரியான வியூகம் இல்லை என்றும் விமர்சித்தார். கடந்த 3 மாதங்களாக எதிர்கட்சிகள் தன்னை மோசமாக  சாடியதாகவும், எதிர்கட்சிகளின் வசவுகளை தான் பாராட்டுகளாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். எதிர்கட்சியினர் யாரைத் திட்டுகின்றனரோ அவர்கள் பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றனர்  அதற்கு தான் ஒரு உதாரணம் என தெரிவித்தார். 

காங்கிரஸ் ஆட்சியில் திட்டங்களுக்கு அவர்களது குடும்பத்தினர் பெயர்களையே வைத்தனர்எனவும், காங்கிரஸ் கொடி, சின்னம் என அனைத்து அடையாளங்களும் திருடப்பட்டவையே என்றும்  சாடினார்.

அம்பேத்கரை இரண்டு முறை தோற்கடித்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள் தான் என்றும் ஏழையாக இருந்து பிரதமரான யாரையும் காங்கிரஸ் ஏற்ப்பதில்லை என்றும் அதனால் ஒரு ஏழைத் தாயின் மகனான தான் ஒரு பிரதமரானதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை என்று கூறீனார். மன்னராட்சி முறையில் இருந்து காங்கிரஸ் இன்னும்ம் வெளிவரவில்லை எனவும் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசுகையில்:- “ கட்சத்தீவை மீட்டெடுங்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கு கடிதங்கள் எழுதியவாறே உள்ளதாகவும், ஆனால் கட்சத்தீவை தாரைவார்த்தது இந்திரா காந்தி தான் எனவும் குறிப்பிட்டார்.

இடையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசுகையில்,  இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை உறுதி எனவும், மணிப்பூரில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும் எனவும்தெரிவித்தார். 

இதையும் படிக்க   | ” அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக -க்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது” - எஸ். வி. சேகர்.