என்னை பாம்புடன் ஒப்பிட்டு பிரசாரம் செய்கின்றனர்...10 ஆம் தேதி தகுந்த பதிலடி கிடைக்கும் - பிரதமர் மோடி!

என்னை பாம்புடன் ஒப்பிட்டு பிரசாரம் செய்கின்றனர்...10 ஆம் தேதி தகுந்த பதிலடி கிடைக்கும் - பிரதமர் மோடி!

காங்கிரசுக்கு வாக்களித்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்றத்தில் கூட காங்கிரசும், ஜனதா தளமும், அனைத்து பிரச்னைகளிலும் ஒன்றாகவே உள்ளன என்றும், ஆனால் தற்போது  ஓட்டுக்காக இருவரும் தனித்தனியாக தற்போது  செயல்படுவதாகவும் சாடினார். ஜனதா தள கட்சி காங்கிரஸ் கட்சியின் பிடீம் எனவும், இருக்கட்சியும் கர்நாடகத்தை கொள்ளையடித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க : " பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்கனும்..?" - நடிகை கஸ்தூரி பேச்சு.

ஜனதா தள கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் காங்கிரஸின் கணக்கில் செல்லும் என்றும், காங்கிரசுக்கு வாக்களிப்பது என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும் என்றும் மோடி விமர்சித்தார். தன்னை  விஷப்பாம்புடன் ஒப்பிட்டு எதிர்கட்சிகள் மக்களிடம் வாக்கு கேட்பதாகவும், இதற்கு மே 10-ம் தேதி கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.