59 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடக்கம்...

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது.

59 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடக்கம்...

மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைந்தது அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், சோகியாங் தொகுதி தவிர்த்து மீதமுள்ள 59 தொகுதிகளில் வாகுப் பதிவு தொடங்கியது.

சோகியாங் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | நாளை வாக்குப்பதிவு...வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்... !

வாக்காளர்களுக்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 419 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.  அதேபோல, நாகாலாந்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 2 ஆயிரத்து 291 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலை முதலே வாக்கு செலுத்த தொடங்கியுள்ளனர். அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கசெட்டோ கிமினி போட்டியின்றி தேர்வால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் ஓய்ந்தது...!